ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின் போது மோதல் சம்பவம் நடந்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நொடிக்கு நொடி பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த மோதலில் திமுக, நாதக ஆகிய இரு கட்சியினரும் கல்வீசி தாக்குதல் செயலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் திமுக நகரச் செயலாளர் யூனுஸ் தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.