ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 111 மேற்கொண்ட குழு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் கொண்ட குழு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணிக்காக அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 250 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், 35 செக்போஸ்ட்கள் அமைத்தும் சோதனை செய்து வருகிறார்கள். கட்சிக் கொடியுடன் வரும் வாகனங்களை போலீசார் பிடித்து உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் வாகனங்களில் பணம் எதுவும் கடத்தப்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.