மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

இதன் வாயிலாக காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது மாற்றும் மின்சார உற்பத்தி முறைகளில் சூரிய மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழ்நாடு உச்சம் தொட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.