தெலங்கானா மாநிலத்தில் இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு உள்ளது” என மாதவி லதா பேசியிருந்தார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வேட்பாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.