கடந்த வாரம் ஓய்வூதியதரர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் வழங்கப்படும் உதவித்தொகைகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும்   தியாகிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது இப்போது  வழங்கப்படும் தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ.10000ல் இருந்து ரூ. 12000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அந்தஸ்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களை  விரைவில் சந்திக்க இருப்பதாக தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசி உள்ளார். ஏற்கனவே சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.