இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவரது கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ   சமீபத்தில் அந்நாட்டின் சிசிலி நகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த ஜார்ஜியாவின் கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ  சர்ச்சை கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது நீங்கள் நடனம் ஆடுவதற்கு சென்றால் குடிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. எந்தவிதமான தவறான புரிதலும் எந்தவிதமான பிரச்சனையும் இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் மதுபானம் அருந்துவது மற்றும் அதனால் உணர்வை இழப்பது போன்றவற்றை தவிர்த்து விட்டால் பிரச்சனைகளில் சிக்காமல் ஓநாய் முன் நீங்கள் வராமல் தவிர்க்கலாம் என பேசியுள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு இளம் பெண்களுக்கு போதிப்பதற்கு பதிலாக இளம் ஆடவர்களுக்கு மரியாதையை வெளிப்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆன்ட்ரியா கியாம்புருனோவுக்கு கூறியுள்ளனர். மேலும் ஒப்புதலுக்கான மதிப்பை ஆண்களுக்கு கற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சியின் செசிலியா தெரிவித்துள்ளார். இதுவரை ஆண்ட்ரியா கியாம்புருனோவின் மனைவியும் பிரதமருமான ஜார்ஜியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.