வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்..

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து அணிகளின் ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளன.இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே, இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா  இந்த உலகளாவிய போட்டியிலிருந்து வெளியேறியதால், இலங்கை அணி பெரும் அடியை சந்தித்தது.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, ஆனால் ஹசரங்கா உலக கோப்பையில் விளையாட மாட்டார் என்பது உறுதியாக கருதப்படுகிறது. ஹசரங்காவுக்கு மாற்றாக எந்த வீரர் என்பதை தேர்வு செய்ய இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

தொடையில் காயம் :

தொடை காயம் காரணமாக அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் ஹசரங்கவால் விளையாட முடியாது. முன்னதாக, காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பையிலும் பங்கேற்க முடியவில்லை. லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஹசரங்க இந்த காயத்திற்கு உள்ளானார்.

ஹஸ்ரங்காவின் வெளியேற்றம் ஒரு பெரிய இழப்பு :

ஹசரங்கா அணிக்காக சில காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்ததால், ஹசரங்கா வெளியேறியுள்ளது இலங்கைக்கு ஒரு பெரிய அடியாகும். உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கூட அவரது பங்கு முக்கியமானது. ஹசரங்கா இந்திய சூழலை முழுமையாக அறிந்தவர் மற்றும் ஐபிஎல் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.