பொதுவாக சூரியன் பகலிலும் நிலவு இரவிலும் தெரியும். ஆனால் சில நாடுகளில் அது மாறலாம். அதாவது நம்முடைய இந்தியாவில் சூரியன் பகலில் தெரியும் நிலையில் அமெரிக்க நாட்டில் அதுவே இரவாக இருக்கும். அதுவே நம் நாட்டின் இரவாக இருக்கும் போது அமெரிக்காவில் பகல் பொழுதாக இருக்கும். இப்படி உலக அளவில் ஒரு சில நாடுகளில் இரவு பகல் என்பது மாறலாம். இந்நிலையில் பகலில் பிரகாசமாக ஜொலிக்கும் சூரியன் இரவில் ஏன் தெரிவதில்லை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

அது பற்றி தற்போது பார்ப்போம். அதாவது பூமி சூரியனை சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வரும் போது பூமியின் ஒரு பகுதி மீது சூரியனின் ஒளிவிழும். இந்த ஒளிவிழும் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு அப்பொழுது பகல் நேரமாக இருக்கும். அதன் பிறகு பூமியின் சில பகுதிகளில் சூரிய ஒளி விழைமல் இருக்கும் நிலையில் அந்த நாடுகளில் இரவு பொழுதாக இருக்கும். மேலும் இதன் காரணமாகத்தான் பகல் பொழுதில் சூரியன் தெரிகிறது. இரவு நேரங்களில் சூரியன் தெரிவதில்லை.