நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இரட்டிப்பாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீடு தொகை தற்போது 5 லட்சமாக உள்ள நிலையில் அதனை பத்து லட்சமாக உயர்த்தலாம். இந்த திட்டத்தின் கீழ் புற்றுநோய் மற்றும் பிற ஆபத்தான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.