இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புற்றுநோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற தீவிர நோய்களுக்கு அதிக செலவினங்களை வழங்குவதை உறுதி செய்ய அதன் முதன்மையான ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ஆக இரட்டைப்பாக்குவதற்கான திட்டத்தை இறுதி செய்வதில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் பயனாளிகளின் எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.