
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 14ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 2 மொழிகளிலும் நேரடியாக வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்டில் உருவாகும் “SK21” படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த “டான்” படம் வாயிலாக பிரபலமானவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இப்படம் 2024ல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
Don combo #Sivakarthikeyan & director #Cibi to reunite once again for a movie soon⌛🎬
Movie is currently in initial stage & will kickstart in 2024 🤝
©️ MovieCrow pic.twitter.com/kF0RKPrNv9— AmuthaBharathi (@CinemaWithAB) May 20, 2023