தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர்தான் நாகசைதன்யா. இவர் நாகார்ஜுனாவின் மகன். இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அவருடைய தோற்றங்கள் மற்றும் வெளியிடும் புகைப்படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு முன்பாக தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த சோபிதா இனி அப்படி வேடங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில்நடிக்க மாட்டார்” என்றும் கூறப்படுகிறது.