
சீரியலில் தனக்கு மாமியாராக நடித்த நடிகையையே அதே சீரியலில் மருமகனாக நடித்த நடிகர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிரமிக்க வைத்துள்ளது. அண்மையில் இந்த ஜோடி தங்களின் இருபதாவது திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்களின் திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தெலுங்கில் மிகவும் பிரபலமான சக்ரவாகம் என்ற சீரியல் 2003 ஆம் வருடம் ஒளிபரப்பானது. இதில் தன்னுடைய கணவர் இந்திரனிலீக்கு மாமியாராக நடித்திருந்தார் மேக்னா ராமி .
1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியலின் டிஆர்பி எப்போதுமே டாப்பில் தான் இருந்துள்ளது. இந்த சீரியலில் மாமியார் மருமகனாக நடித்த இந்திரனிலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆன போதிலும் குழந்தை இல்லை என இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் 40 வயது தம்பதிக்கு இப்போது குழந்தை பிறந்தாலும் அவர்கள் வளர்க்கும் போது 60 வயதாகும். அந்த சமயத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யார் இருப்பார்கள் என்று பயம் இருக்கிறது. அதனால் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.