சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறைகளில் செல்போன், சாட் – ஜி, செயற்கை அறிவு நுட்ப செயலி மற்றும் பிற எலக்ட்ரானிக் கருவிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சாட் – ஜிபிடி ன்பது கடந்த 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கணினி தொழில்நுட்பம்.

இது கணினி மற்றும் இன்டர்நெட் இணைப்புகளில் உள்ள தரவுகளைக் கொண்டு நம்முடைய தேடலுக்கு ஏற்ப புதிய கட்டுரைகள் மற்றும் உரையாடல்களை உருவாக்கி கொடுக்க கூடியது. மனித உதவியாளர் போன்ற பணியை இது எளிதாக செய்துவிடும் என்பதனால் மாணவர்கள் இதை தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.