தசரா பண்டிகையை முன்னிட்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart தனது வாடிக்கையாளர்களுக்காக பிக் தசரா விற்பனையை தற்போது தொடங்கியுள்ளது. அக்டோபர் 22 முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எட்டு நாட்கள் விற்பனையில் அனைத்து வகையான பொருட்களுக்கும் அதிரடியான தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் 10% வரை தள்ளுபடி பெறலாம் எனவும் ஆடைகள், காலணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என லட்சக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.