பொதுவாக வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டை லீசுக்கு அல்லது வாடகைக்கு விடும் போது வாடகை ஒப்பந்தத்தில் என்னென்ன செய்ய வேண்டும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வீடு சட்ட பாதுகாப்புடன் இருக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயமாக குத்தகைதாரர் மற்றும் அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் குடியிருப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை வாடகை ஒப்பதத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தில் குத்தகைதாரர் வீட்டின் வளாகத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் குடும்ப உறுப்பினரை தவிர வேறு எவரையும் தங்கு அனுமதிக்க கூடாது, வீட்டில் இருக்கும் பீரோ, ஃபேன் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றை குத்தகைதாரர் பாதிப்புக்கு உள்ளாக்கினால் அதற்கு குத்தகைதாரர் தான் முழு பொறுப்பு, வீட்டை காலி செய்யும் மாதங்களுக்கு முன்பாகவே குத்தகைதாரர் வீட்டை காலி செய்கிறார் என்றால் அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக அந்த பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.