கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க மற்றும் பீகார் வழியாக அசாம் சென்றடையும்.

இந்த ரயில் தற்போது வாரம் இரண்டு முறை இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மே 7ஆம் தேதி முதல் வாரம் 4 முறை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மே 7ஆம் தேதி முதல் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அதிக தூரம் செல்லும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.