
கிரிக்கெட் அரங்கை அலங்கரித்த சிறந்த வீரர்களில் முக்கியமானவர்தான் கேப்டன் கூல் என்று அனைவராலும் புகழப்படும் தல தோனி. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இன்று தோனி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் தோனியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகின்றார். அவருக்கு 12 கோடி ரூபாய் ஊதியம் தரப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகின்றார். ராஞ்சியில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமான பண்ணை வீடு வைத்துள்ள தோனியிடம் விலை உயர்ந்த பல கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. அவரின் மொத்த சொத்து மதிப்பு 1040 கோடி என்று கூறப்படுகிறது.