தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது அவசியம். விடைத்தாள், வினாத்தாள் மற்றும் தேர்வு எண் உள்ளிட்ட வகைகளை சரி பார்த்துக் கொள்ளவும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் பணியின்போது தேர்வர்கள் அச்சமுரும் வகையில் செயல்படக் கூடாது. தேர்வு மையத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது. அதையும் மீறி அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் தேவர்கள் மனநிலை, உடல்நிலை மற்றும் தேர்வு எழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.