
இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் (IRDAI) உதவி மேலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் Finance, Actuarial, Law, IT, Generalist போன்ற துறைகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான
கல்வித் தகுதிகள்: LLB, CA, CFA, MBA, BE, BSC, BA போன்ற பட்டப்படிப்புகள் ஆகும். மாதச் சம்பளம் ₹44,500 முதல் தொடங்குகிறது.
வயது வரம்பு: 21 முதல் 30 வரையானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடங்கும்.
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்டமாக முன்னேறுவர்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்காக IRDAI இணையதளத்தைப் பார்வையிடவும்.