தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியில் விலை 17 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசி தற்போது 3000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை சரியாக இன்னும் ஒரு வருட காலம் ஆகும். இது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.