
தமிழகத்தில் காலியாக இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலர்கள் பணி எப்போது நிரப்பப்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, இன்னும் ஒரு மாதத்தில் 7 ஆயிரத்து 900 அங்கன்வாடி பணியாளர்கள், 8 ஆயிரத்து 917 சத்துணவு சமையலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.