
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் பல்வேறு நூதன முறையில் சைபர் குற்றவாளிகள் பெருகி வருகின்றனர். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதுகுறித்து அரசு மற்றும் காவல்துறையினர் இணைந்து தொடர்ந்து பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். தற்போது OTP இல்லாமலேயே வெறும் மொபைல் எண்கள் மூலமாகவே தனிநபர் விவரங்கள் திருடப்படுகின்றன என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த இளம்பெண்(26) ஒருவர் குரோமோவில் இருந்து HP லேப்டாப் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை வாங்கிய சில நாட்களுக்குப் பின் தெரியாத நம்பரில் இருந்து இவருக்கு பரிசு பொருள் விழுந்ததாக வவுச்சர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் குரோமோ மற்றும் விஜய் சேல்ஸ் என்ற இரண்டு பெயர்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அந்த லிங்கை தொடாமல் அருகில் உள்ள சைபர் கிரைமிற்கு சென்று தகவல் அறிந்து கொண்டார். இதனால் அவர் மோசடியில் இருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.
அதாவது சமீப காலங்களில் பொருட்கள் ஏதாவது ஒன்று வாங்கினால் அதற்கு நாம் கொடுக்கும் மொபைல் எண்ணை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் தங்களுக்கு பரிசு பொருள் விழுந்து உள்ளதாக லிங்க் ஒன்றை அனுப்புகின்றனர். அந்த எண்ணின் பயனாளர் அந்த லிங்கை தொட்டவுடன் அவர்களது தனி நபர் விவரங்கள் பகிரப்பட்டு உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.