டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel) பரிந்துரைத்துள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாற்றுக்குப் பதிலாக ‘செந்நெறிக் காலம்’ என்ற சொல்லினை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.