நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பல மாநிலங்களிலும் சட்ட விரோதமாக வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது கர்நாடக அரசு அன்னபாக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ரேஷன் கார்டுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு முடக்கப்படும் என்று கர்நாடக மாநில உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.