
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி இவ்வாறு செய்துவிட்டதாகவும், தனது கணவர் கார்த்திக் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், திருமணமான 2 வருடங்களில் இதை கண்டுபிடித்ததாகவும், தனுஷும் கார்த்திக்கும் நீண்ட நேரமாக தனியாக ஒரு அறையில் இருந்தார்கள் எனவும் அதிர்ச்சி தகவலை கூறி பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் யூடியூப் சேனல்கள் தவறுதலாக திரித்து வெளியிடுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலொன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், இனிமேல் தனது யூடியூப் சேனலில் மட்டும் பேச உள்ளதாகவும், அதில் சினிமா, தத்துவம் சார்ந்த வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் கூறினார். மேலும், மற்ற யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.