தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் பின்னர் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் பிருந்தாவனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி திரைப்படம் சமந்தாவின் கடைசி படமாகும்.

அதன்பிறகு சமந்தா படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் சமந்தா நடிப்பில் தி சிட்டாடல் ஹனி பனி வெப் தொடர் வெளியானது. இந்நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தற்போது இது பற்றி பேசியுள்ளார். அதாவது ராஜ் மற்றும் டி.கே ஆகியவுடன் இணைந்து தி ஃபேமிலி மேன் மற்றும் தி சிட்டாடல் வெப் தொடர்களில் நடித்ததன் மூலம் இனி சவாலான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

அவர்கள் அதிரடியான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதை தனக்கு உணர்த்திவிட்டதாக கூறிய சமந்தா இனி அது போன்ற கதாபாத்திரங்களில் மட்டும் தான் அடிப்பேன் என்றும் ஒவ்வொரு திரைக்கதையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே இனி ரொமான்ஸ் படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் ஆக்சன் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் எனவும் சமந்தா கூறிய நிலையில் இனி அவரை அடிக்கடி திரையில் பார்க்க முடியாது என்பதை அவரே  கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள சமந்தா இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.