மத்திய பிரதேச அரசு அம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் கன்யா திருமண உதவி திட்டத்தில் இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி அந்த உதவி தொகையானது 51,000 ஆக உயர்த்தப்படும் என்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதேபோல லட்லி பஹன்னா யோஜனா திட்டத்தின் மூலம் ஜூன் 10ஆம் தேதி முதல் தகுதி உள்ள பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது ரூபாய் 1.18 லட்சம் தொகையானது அவர்களுடைய வங்கி கணக்கு செலுத்தப்பட்டு குழந்தைக்கு 21 வயது முடிவடையும்போது அந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.