தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு இரு மொழி கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்போதியில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அரசு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழை சட்ட ஆட்சி மொழியாக மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் சட்டத்துறையின் தமிழ் பிரிவு மூலம் தமிழில் சட்ட சொற்களஞ்சியம் தயாரிப்பது, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் அவசர சட்டங்கள், அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிக்கைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான பணிகளை தமிழக அரசின் சட்டத்துறை தற்போது செய்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளை தமிழ் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.