நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது என்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் இந்த கமிட்டி, இனிவரும் காலங்களில் ‘அங்கீகாரம் பெற்றவை’ அல்லது ‘அங்கீகாரம் பெறாதவை’ என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என்று NAAC அறிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையிலான நிலைகள் வழங்கப்படுவதுடன், அவற்றை உயர்ந்த நிலையை அடைய ஊக்குவிக்கும் என்றும் NAAC முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.