யெஸ் வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் தங்களுடைய சேமிப்பு கணக்குகளின் சேவை கட்டணங்களில்  சில மாற்றத்தை செய்வதாக அறிவித்துள்ளன. இந்த மாற்றங்களானது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த இரண்டு வங்கிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு வகைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புரோ மேக்ஸ் சேமிப்புக் கணக்குக்கு சராசரி மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000 என்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்சக் கட்டணம் ரூ. 1,000. அதேபோல, புரோ பிளஸ் சேமிப்புக் கணக்கு, யெஸ் எசென்ஸ் சேமிப்புக் கணக்கு மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.750 கட்டணத்துடன் ரூ.25,000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.

புரோ சேமிப்பு கணக்குக்கு சராசரி மினிமம் பேலன்ஸ் ரூ. 10,000 கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச கட்டணம் ரூ. 750 ஆக இருக்கும். சேமிப்பு மதிப்பு மற்றும் கிசான் சேமிப்புக் கணக்கிற்கு ரூ. 5,000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியும் அதன் பல வங்கிச் சேவைகளில் மாற்றங்களைச் செய்வதாக அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB), பண பரிவர்த்தனை கட்டணங்கள், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் மற்றும் பல சேவைகள் அடங்கும்.