தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். ‘LIGER’ படத்தின் பிறகு, தனது படங்களைப் பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர், “இனி என் படங்கள் வெளியாவதற்கு முன்போ, வெளியான பின்போ, அதைப் பற்றிய எந்த விஷயத்தையும் பேசப் போவதில்லை” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தன்னிடம் தானே தண்டனை விதித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். LIGER படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததே விஜய் தேவர கொண்டாவின் இந்த முடிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.