காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய விதிப்படி, டிக்கெட்டை ரத்து செய்தால் இனி 60 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.