கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறு மார்க்கமாக ஞாயிறு, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பிப்ரவரி 22, 23,24,26 ஆகிய தேதிகளில் மனக் நகர், லக்னோ மற்றும் மால்கோர் வழியாகவும், பிப்ரவரி 28 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை கான்பூர், பிரயக் ராஜ், பிரதாப்கர், சுல்தான் போர் மற்றும் அயோத்தியா வழியாகவும் இயக்கப்படும். பிப்ரவரி 22 முதல் 26ஆம் தேதி வரை 3 மணி நேரம் தாமதமாகவும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் நான்கு மணி நேரம் தாமதமாகவும் புறப்படும். இந்த ரயில்கள் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு , சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது