பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக வேகத்தில் அடித்தார். ஆனால், அதனை வேகமாக எதிர்கொண்டு, இடது பக்கம் குதித்து கிளென் பிலிப்ஸ் ஒருகையாலே பிடித்து  கைப்பற்றினார். கீழே  விழுந்தாலும் அவர் பந்தை உறுதியாக பிடித்திருந்தார்.

நியூசிலாந்து அணியின் மிக சிறந்த பந்துவீச்சு திறமையுடன், பிலிப்ஸ் தனது மீண்டும் ஒரு அசத்தலான பீல்டிங் காட்சியால் ரசிகர்களை ஈர்த்தார். இந்த அற்புதமான கேட்ச்  போட்டியின் முக்கியமான தருணமாக மாறியது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இதற்கு பாராட்டுகளை தெரிவித்து, “இது போட்டியின் சிறந்த கேட்ச்!” என்று பலரும் கருத்து பகிர்ந்துள்ளனர்.