இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான். சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் உள்ள தேனூர் கிராமத்தில் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு 450 வருடங்களுக்கு மேலாக புகைப்பிடித்தலுக்கு மது அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கிருக்கும் மக்கள் கூறுகையில், இந்த கிராமம் சுந்தரராஜன் பூமி. கள்ளழகர் தேசம். கடவுளுக்கு எங்களுடைய பக்தி மரியாதை காட்டுவதற்காகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய பழங்கால மரபுகளை மதிக்கும் ஒரு வழி என்று தெரிவித்துள்ளனர்.