
இந்தியாவில் அதிக அளவிலான இளைஞர்கள் ஆண்டுதோறும் தங்களது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். இவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தங்களது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பது தற்போது மிகவும் சவாலாக உள்ளது. இந்நிலையில் புதிதாக வேலைக்கு சேருபவர்களின் ஊதியம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், ஆச்சிரியமான முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வை ஃபவுன்ட்-இட் நிறுவனம் மேற்கொண்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு செல்பவர்களின் ஊதியம் அதிகரித்துள்ளதான தகவல் வெளிவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சராசரியாக வருடத்திற்கு ரூ 3 முதல் 6 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டோருக்கு 25 முதல் 33 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பள உயர்வு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக டிஜிட்டல் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ், தொழில்நுட்பம் போன்ற துறைகள் தான் உள்ளது.