அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்த நிலையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜானக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா நேபாளம் இடையேயான கலாச்சார இணைப்பின் அடையாளம் தான் ராமரும் சீதையும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி என்பி சவுத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “ஜெய் ஸ்ரீ ராம்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த விழா சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவருக்கும் பெருமையான தருணம் தான்.

நேபாளத்தின் மகள் சீதையும் ராமரும் தியாகம், நீதி மற்றும் தைரியத்தின் உருவகங்கள். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான இணைப்பை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.