கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாட்டின் மிகப் பழமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெர்ஹமாம்பூர் வங்கி திவாலானதால் அந்த வங்கியை கலைக்க வேண்டும் என கடந்த 1948-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 1951-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை கடந்த 72 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், அந்த செப்டம்பர் மாதம் வங்கி கலைப்பு தொடர்பான வழக்கு இருமுறை விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிக் கலைப்பு தொடர்பான வழக்கு பதிவான நிலையில் தற்போது நிலுவையில் இருந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு விசாரணை நடைபெற்ற போது வங்கி தரப்பில் விசாரணைக்கு யாருமே ஆஜராகாததால், வழக்கு குறித்து அறிக்கை அளிக்குமாறு வங்கி கலைப்பு அதிகாரிக்கு நீதிபதி ரவி கிருஷ்ணா கபூர் உத்திரவிட்டார். அப்போது கடந்த 2006-ம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டதும், அது தொடர்பான விவரங்கள் எதுவும் ஆவணங்களில் பதிவாகாததும் தெரியவந்தது. இதன் காரணமாக தற்போது 72 ஆண்டுகளாக முடித்து வைக்கப்படாமல் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் நாட்டின் மிகப் பழமையான 4 வழக்குகளில் இன்னும் 2 வழக்குகள் கொல்கத்தா நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.