தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடித்த துணிவு படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அஜித்தின் ஏகே 62 பட அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் என்ற பகுதியில் கேக் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் போன்று ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் கேக் செய்து வைத்துள்ளனர். இந்த கேக் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.