பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ‛‛வனக்குளியல்” என்பதை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ‛‛தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்” எனும் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்ப்பட்டது. அதன்படி மிகுந்த மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு தங்களிடம் வருபவர்களை விதானசவுதா (கர்நாடகா சட்டசபை) மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சுற்றி பரந்து விரிந்துள்ள கப்பன் பார்க் பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர்.

அங்கே வளர்ந்துள்ள மரங்களை கட்டிப்பிடிக்க வைத்து, மரங்களுக்கு இடையே அவர்களை நடக்க வைக்கிறன்றனர். இதற்கு 18 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.