
சிறக்கடிக்க ஆசை சீரியல் தொடங்கிய நாள் முதல் முத்து மற்றும் மீனாவிற்கு ஏதாவது வில்லன் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். முத்துவிற்கு டிராபிக் போலீஸ் இப்பொழுது வில்லனாக உள்ளார். எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் பழிவாங்கலாம் என்று காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தொழிலைக் கெடுக்கும் வில்லியாக சிந்தாமணி இருக்கிறார். இந்த வார கதைகளத்தில் அவர் ஏற்படுத்திய நஷ்டத்தை மீனா எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் கதை. இந்த தொடரில் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை சுஜாதா.
இவர் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஈசன் படத்தில் வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்து குறைந்த நாட்களிலேயே நான் எல்லோருக்கும் பரிட்சயம் ஆகிவிட்டேன். குறைந்த எபிசோடுகளில் நடித்ததாலும் மக்கள் என்னை அடையாளம் காண்கின்றனர். மீனாவை ஏன் இப்படி பாடப் படுத்துகிறாய் என்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் இறந்துவிட்டார் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் போனேன். அப்பொழுது ஒரு சிறுவன் என்னிடம் வந்து இந்தா பாருங்க சிந்தாமணி நீங்க மீனாவே ரொம்ப சீண்டி பாக்குறீங்க இது சரியில்லை என்று சொல்லிட்டு போனான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு சின்ன பையன் கூட என்னை ஞாபகம் வச்சு இருக்கான் என்று . அவன் கேட்டதும் சிரிப்பு தான் வந்தது. இந்த அளவிற்கு சீரியல் ரீச் ஆகியிருக்கு என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.