நெகட்டிவான கமெண்ட் போட்ட இணையவாசிகளுக்கு பவித்ரா சரியான பதிலடி கொடுத்து பதிவு போட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் எட்டாம் சீசன் ஒளிபரப்பப்பட்டது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னராக சௌந்தர்யா வென்றார்.  இந்த சீசன் முடிவடைந்த பிறகு போட்டியாளர்கள் அனைவரும் வெளியூர், வெளிநாடு என்று தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட அதெல்லாம் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் பைனல் வரை வந்த பவித்ரா ஜனனி தற்போது பருவதமலை மீது ஏறி சாமி தரிசனம் செய்திருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவரோடு ராயனும் சென்றுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து  இணையவாசிகள் போட்ட கமெண்டுகள் அனைத்துமே நெகட்டிவ் ஆக இருந்தது . இந்த நிலையில் இந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பவித்ரா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ‘இது என்னுடைய பர்சனல் லைஃப். யாருடன் ட்ரிப் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பது என்னுடைய பர்சனல் சாய்ஸ்” என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் இணையவாசிகள் தற்போது அமைதியாக இருக்கிறார்கள்.