இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படக்கூடிய அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.

அதேநேரம் மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் இந்திக்கு, மற்ற இந்திய மொழிகளை விட எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது. அதோடு இந்தி பேசாத இந்தியர்கள் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்-ன் இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படும் அவமரியாதைக்கு அதன் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.