நம்முடைய முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பிறகு துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயமாக இருக்கும் என்பது நம் அனைவரும் தெரிந்தது. அந்த வகையில் சுப நிகழ்ச்சிகளிலும் சரி அமங்கலமான நிகழ்வுகளின் போதும் சரி மாவிலை தோரணம் கட்டுவதற்கு பின்னால் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக தாவரங்களில் பகல் வேளையில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சி கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் ஆற்றல் கொண்டது.

இது தாவரத்தின் இலைகள் மூலமாக நடைபெறுகிறது. இலைகள் தாவரத்தோடு இணைந்திருக்கும் பொழுதுதான் இது சாத்தியம் . ஆனால் மாவிலை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட  பிறகும் கூட கார்பன் டை ஆக்சைடை  உறிஞ்சி  கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் ஆற்றல் கொண்டது. இதன் காரணமாகத்தான்  மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே மாவிலை தோரணம் கிருமி  நாசினியாக செயல்படுகிறது . மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு உள் ஈர்த்து  சுற்றுச்சூழல் சூழலை சீர் செய்வதாக கூறப்படுகிறது.