விக்ரவாண்டி இடைத் தேர்ததில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமகவிற்கு மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டு இருந்த பாமக பல தொகுதிகள் டெபாசிட் இழந்து விட்டது.

இதன் காரணமாக பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் புதிய சின்னத்தை வைத்தே  இடைத் தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவிற்கு ஏற்பட்டுள்ளது.