கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். எனினும் நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல் ஏசி இருக்கிறது எனில், அதன் பின்பகுதி பால்கனியில் தான் வைக்கப்படும்.

அதே நேரம் பால்கனியில் போதுமான இடம் இருக்கவேண்டும். மற்றொருபுறம் ஸ்பிலிட் ஏசி எனில் அதன் வெளிப்புற அலகு உங்களது வீட்டின் வெளியில் நிறுவப்பட்டிருக்கும் (அ) பால்கனியில் நிறுவப்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் ஒரு போதுமான இடம் இருக்கவேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்தால் நீங்கள் கொஞ்ச நேரம் ஏசியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். உண்மையில் வீட்டில் உள்ளதால் ஏர் கண்டிஷனருக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாது.

இருப்பினும் கன மழையின்போது ஏசியில் மின்னல் விழுந்தால், பிறகு அது முற்றிலும் சேதமடைந்துவிடும். அதிக மழை பெய்தாலும் ஏசி பயன்படுத்துவதை கொஞ்ச நேரம் நிறுத்தவேண்டும். ஏனெனில் அதிக தண்ணீர் உள்ளே நுழைந்தால் அதன் வயரிங்கில் சிக்கல் இருக்கலாம் (அ) முழு ஏசியும் சேதமடையக்கூடும். இது போன்ற ஒரு விஷயம் நடக்காமல் இருக்க கன மழை மற்றும் இடியுடன்கூடிய மழையின் போது நீங்கள் AC-ஐ அணைக்கவேண்டும்.