2025 ஆம் ஆண்டுக்கான 97வது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இரண்டு மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது போட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 323 திரைப்படங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அதில் 207 படங்கள் சிறந்த திரைப்படங்கள் பிரிவில் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.

இந்நிலையில் இந்த பட்டியலில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் அதில் ஒன்றாக சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்கள் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்று 17ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும். மேலும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.