
உலகில் முதல் முறையாக கடலில் உயிரினங்கள் தோன்றியதாக நம்ப படும் நிலையில் பூமியில் 71% கடல் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக கடலில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மெக்சிகோ மற்றும் ஹவாய் தீவிற்கு இடைப்பட்ட பசிபிக் கடலில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அப்போது உலகின் இதுவரை கண்டறியப்படாத வினோத உயிரினத்தை கண்டறிந்துள்ளனர். இவைகள் 11,480 முதல் 18,045 அடி ஆழத்தில் காணப்படுகிறது.

இவைகள் அபிசோபெலாஜிக் எனப்படும் கடல் மட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய வகை உயிரினத்தை கண்ணாடியின் தன்மை கொண்ட கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்த உயிரினத்திற்கு தற்போது Unicumber என்ற பெயர் வைத்துள்ளனர். இவைகள் கடலின் ஆழ் மட்டத்தில் உள்ள இயற்கை குப்பைகளை உண்டு உயிர் வாழ்கிறது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் விரிவான தகவலை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் கடலில் ஆழ் மட்டத்தில் இதுவரை 10 முதல் 9க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டறியப்படாமலே இருப்பதாக கூறியுள்ளனர்.