வில்லிவாக்கம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 13-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அங்கு சென்று பணிகளை பார்வையிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஸ்டீபன்சன் சாலை மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்தில் கட்டி முடிக்கப்படும். தியாகராய நகர் நடைபாதை பாலம் ஓரிரு தினங்களில் திறக்கப்படும். இந்து சம அறநிலையத்துறையில் ரூ.4200 கோடி மதிப்பீட்டில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. சிதம்பரம் குழந்தை திருமணம் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. ஆளுநர் என்ன ஆண்டவரா..?  சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆகும். தமிழ்நாடு அரசு புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.